கேளிக்கை

பாடகியாகும் சன்னி லியோன்..



மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை.

அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார்.

தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சை பாடகராக்கினேன். கா படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். கர்ஜனை, பரமபத விளையாட்டு என திரிஷா நடிக்கும் 2 படங்களுக்கு இசையமைக்கிறேன்.

சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரசிகையிடம் அடிவாங்கிய பிரபாஸ்…

wpengine

மகளின் முதல் படத்தால் கவலையும், மகிழ்ச்சியுமடைந்த ஸ்ரீதேவி…

wpengine

ஹிந்தியில் சாதிப்பாரா கீர்த்தி சுரேஷ்?

wpengine