விளையாட்டு

பாக்.அணிக்கு புதிய தலைவராக சர்பிராஸ் தெரிவு.



டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து அணித்தலைவர் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி ராஜினாமா செய்தார்.

தனது ஆலோசனைகளை கேட்க மறுத்ததாகக் கூறி பயிற்சியாளர் வாக்கார் யூனிசும் பதவி விலகினார்.

இந்நிலையில் அப்ரிடிக்குப் பதிலாக டி20 அணியின் தலைவராக சர்பிராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு உப தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவருக்கு டி20 அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான், சர்பிராஸ் அகமதுவை தொடர்பு கொண்டு அவரை தலைவராக தேர்வு செய்தது குறித்து தகவல் தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளார்.

28 வயதாகும் சர்பிராஸ் அகமது, 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட 1296 ஓட்டங்கள் எடுத்து, சராசரி 46.28 வைத்துள்ளார். 58 ஒருநாள் போட்டிகளில் 1077 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். சராசரி 29.91. டி20 போட்டிகளைப் பொருத்தவரை, 21 போட்டிகளில் விளையாடியுள்ள அகமது, 291 ஓட்டங்கள் (சராசரி 29.10) எடுத்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

wpengine

கெப்டன் உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார் – அஷ்வின்

wpengine

 கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

wpengine