உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாக்தாத் தற்கொலைப்படைத் தாக்குதல் – 12 பேர் பலி



ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் இன்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.

இதில், 8 இராணுவ வீரர்கள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

எனினும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related posts

கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine

சிரியாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத் தாக்குதல்…

wpengine

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine