உள்நாட்டு செய்திகள்

பாக்கீர் மாக்காரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க பிரதமர் உட்பட பல அரசியல்வாதிகள் விஜயம்.


தேசிய ஊடக நிலையத்தின் தலைவரும், முன்னாள் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் 4வதுவது புதல்வன் ஆதில் பாக்கிர் மாக்கார் (வயது 26) நேற்று லண்டனில் காலமாகிய நிலையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் முகமாக கொழும்பிலுள்ள அவரது இல்லத்துக்கு பல அரசியல் முக்கியஸ்தர்களும், உயர் அதிகாரிகளும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க , மற்றும் அமைச்சர்களான, ஹர்ஷ டி சில்வா, மஹிந்த சமரசிங்க, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம், பாலித ரங்கே பண்டார, கருணாரத்ன பரணவிதான உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

மேலும் ஆதில் பாக்கிர் மாக்காரது ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டு வருவதா அல்லது லண்டனில் அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்துறையில் உயர் கல்விக்காக கடந்த மாதம் பிரித்தானியா சென்றிருந்த அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டே வபாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார்…

wpengine

சம்மாந்துறையில் பஸ் விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்!

wpengine

சுமார் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்..!

wpengine