உலக செய்திகள்

பாகிஸ்.பிரதமர் நவாஸ் செரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கடும் எச்சரிக்கை



பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மீது சுப்ரீம் கோர்ட்டில் சுங்க இலாகா அதிகாரி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நேற்று சீனியர் நீதிபதி அஷ்மத் சயீத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் நவாஸ் செரீப்புக்கு நீதிபதி சயீத் கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்தார்.

கோர்ட்டு உத்தரவுகளை பிரதமர் நவாஸ் செரீப் நடைமுறைப்படுத்துவதில்லை. அவர் தொடர்ந்து அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர் பதவி இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அதிக அளவில் இடம் உள்ளது. அங்கு அவர் அடைக்கப்படுவார் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.

கோர்ட்டின் இந்த கடும் விமர்சனத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ

wpengine

அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா…

wpengine

பாகிஸ்தான் தனியார் மருத்துவமனை அருகில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல்

wpengine