உலக செய்திகள்

பாகிஸ்தான் பாடசாலையில் குண்டு வெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான் ) – பாகிஸ்தானில் பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது

wpengine

சிரியா மீது துருக்கி தாக்குதல்

wpengine

பிலிப்பைன்சில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine