உலக செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் போர் விமானி மரணம்



பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார், விமான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில், பெண்களின் பங்கு மிகவும் குறைவு. விமான படையில், சில பெண்களே உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் விமான படையில், முதல் பெண் போர் விமானியாக தகுதி பெற்றவர், மரியம் முக்தியார்.

தற்போது, அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வந்த மரியம் மற்றும் சக வீரருடன், நேற்று முன்தினம் போர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, இஸ்லாமாபாத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தில் 175 கி.மீ உயரத்தில் FT-7PG என்ற விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். விமானம் தரையிரங்கும் போது, ஏற்பட்ட திடீர் கோளாறால், விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், மரியம் முக்தியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Related posts

உலகளாவிய ரீதியில் 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

wpengine

அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை..

wpengine

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

wpengine