உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சங்கா



பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா விளையாட உள்ளார்.

ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் முதல் சீசன் அடுத்த வருடம் பெப்ரவரி 4 முதல் 24 வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கவுள்ளது.

இதில் விளையாட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளார்.

“சங்கக்காரா உலக தரம் வாய்ந்த வீரர். அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்று அந்த தொடரின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.

 

Related posts

அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நியமனம்…

wpengine

துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று

wpengine

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம்…

wpengine