ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலியின் 02 வயதுடைய மகள் உலகை விட்டும் பிரிந்தாள்



(FASTGOSSIP| COLOMBO) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலியின் 02 வயதுடைய மகள் நூர் பாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால், நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே சமயத்தில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆசிப் அலி விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பாத்திமா உயிரிழந்தார். மகள் உயிரிழந்த தகவல் ஆசிப் அலிக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“தான் குற்றவாளி அல்ல…” – துபாய் நீதிமன்றில் கதறிய பணிப்பெண்ணுக்கு கடூழிய சிறை….

wpengine

ஆபாச நடிகை சன்னி லியோவே இந்தியாவை விட்டு வெளியேறு – ராக்கி சாவந்த் போட்டுத் தாக்குகிறார்

wpengine

பெட்ரோலின் விலையானது இன்று(15) இரவு முதல் குறைகிறது..

wpengine