விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரருக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை…



‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த பெப்ரவரி மாதத்தில் துபாயில் நடந்தது. குறித்த போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷர்ஜீல்கான் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

குறித்த இந்த சூதாட்ட விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் ஷர்ஜீல்கானுக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

டோனியின் சாதனையை முறியடித்த அலிசா

wpengine

அணிக்கு மேத்யூஸ் தலைவராக இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை – போட்டுடைத்த தில்ஹார

wpengine

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது

wpengine