விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் பிரபல ஐந்து வீரர்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு… நாட்டிலிருந்து வெளியேறவும் தடை…



டுபாயில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் சூதாட்டத்தில் சிக்கிய ஐந்து வீரர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த Sharjeel Khan, Khalid Latif, Mohammad Irfan, Nasir Jamshed, Shahzaib Hasan ஆகிய ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஐந்து வீரர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார்.

சூதாட்டத்தில் சிக்கிய முகமது இர்பானும், கலாத் லத்தீப்பும் FIA.விடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

(rizmira)

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T-20 போட்டித் தொடருக்கான அணி விபரம்..

wpengine

இங்கிலாந்து அணியுடனான மோதலில் பாகிஸ்தான் தோல்வி

wpengine

ஐபிஎல் வீரர்களுக்கு தடுப்பூசி

wpengine