உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி..



பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் 02 டெஸ்ட், 05 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட டுபாய் சென்றுள்ளது.

முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையில் நேற்று(13) நடைபெற் முதல் ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தொடங்கியது.

பாகிஸ்தான் அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அஸாம் 103 ஓட்டங்களை பெற்றார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களை குவித்தது. தொடர்ந்து 293 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

 

(rizmira)

Related posts

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழனன்று

wpengine

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நீக்கம்

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில்…

wpengine