உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று



(FASTNEWS|COLOMBO)- பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏப்ரல் 24ம் திகதி வரை ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் செய்யப்பட்ட இரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும், குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்வரும் 12ம் திகதி திட்டமிட்டபடி சந்திப்பு…

wpengine

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

wpengine

அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை..

wpengine