உலக செய்திகள்

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ரூ.23,000 கோடி கடன்



(FASTNEWS | COLOMBO) – பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.23,000 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.

அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமையை கையாளுவது பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், நிதி நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,800 கோடி) கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்துக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துபாயில் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதில் 04 பேர் உயிரிழப்பு…

wpengine

மாயமான மலேஷிய விமானம் MH-370 விவகாரம் – வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா..

wpengine

பிற நிறுவனங்களுக்கு கொரோனா மாத்திரை தயாரிக்க பைஸர் நிறுவனம் அனுமதி

wpengine