உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு



பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கை இன்று (12) அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.

பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்களுடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் நிபுணர் குழு கலந்துரையாடியதன் பின்னர் தயார்படுத்தப்பட்ட அறிக்கையே அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

நேற்றைய தினம் குறித்த நிபுணர் குழு இரு தரப்பினருடனும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதன்போது, பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பாக பிரதான 4 விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததாக அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சனா பிரியன்ஜித் கூறினார்.

Related posts

நாமல் குமாரவின் அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை நீதிமன்றில்…

wpengine

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine

மஹேலவுக்கும் முரளிக்கும் வெவ்வேறு சட்டங்களா.. தமிழரென அவமானப்படுத்துகிறது இலங்கை..

wpengine