உள்நாட்டு செய்திகள்

பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!


நீர்கொழும்பு பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது என்று பெண் பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரிக்கும் காட்சி ஒன்றும் இலங்கையின் இணையத்தளம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான தடை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டு வரப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொண்டயாவினை அவரது தாயார் பிணையில் எடுத்தார்

wpengine

இன்றைய வானிலை

wpengine

ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

wpengine