ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பவித்திரா மீதான மோகம்! வீரவன்சவை விரட்டியடித்த மஹிந்த



அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவு பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டு எதிர்க்கட்சி என பிரகடனம் செய்துள்ளதுடன், அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமது அரசியல் செயற்பாடு குறித்த ஆலோசிக்கும் கூட்டம் ஒன்று கடந்த எட்டாம் திகதி மஹிந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினைரை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவுபட்டு சிலர், பவித்ரா, பசில் உறவை உறுதி செய்ததனை குறித்து விமல் உட்பட குழுவினர் மஹிந்தவுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மஹிந்தவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை சுமத்திய விமல், பவித்ராவுக்கு புதிய கட்சியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது எவ்வாறு என வினவியுள்ளார்.

இந்த கேள்வியினால் கோபமடைந்த மஹிந்த “புதிய கட்சி ஒன்று அமைப்பதற்கு முன்னர் பவித்ராவுக்கு நான் எவ்வாறு பதவி வழங்க முடியும்?” என மஹிந்த கூறியுள்ளார்.

எனினும் தொடர்ந்து பசிலின் செயற்பாடுகளை விமர்சித்த விமல், இவர்களுடன் எப்படி வேலை செய்ய முடியும் என விமல் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

விமலுக்கு பதிலளித்த மஹிந்த, மற்றவர் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டாம். எனினும் விமலை விடவும் கட்சியின் செயலாளர் பதவிக்கு பவித்ராவுக்கு தகுதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினருக்குள் அதிகார போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதேவேளை பவித்ராவின் அரசியல் சூழ்ச்சி கூட்டு எதிர்க்கட்சியின் அழிவுக்கான ஆரம்பம் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

Related posts

இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்

wpengine

கட்சித் தலைமை மற்றும் பதவிகளை சஜித்திற்கே வழங்க ரணில் இணக்கம்

wpengine

தான் பெற்ற குழந்தையை நாயைப் போல் நடத்திய தாய்

wpengine