உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | நீர்கொழும்பு) – நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 06 ஆம் திகதி காலை 09 மணி முதல் அடுத்த நாள் காலை 09 மணி வரை நீர் வெட்டு விநியோகம் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கொச்சிக்கடை, தூவ, பிட்டிப்பன, துங்கல்பிட்டிய, பஷியாவத்த, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், கட்டுநாயக்க விமானப் படைத்தளம், பண்டாரநாயக்க விமான நிலையப் பகுதி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

மருதானையில் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு…

wpengine

இருவர் வெட்டிக் கொலை

News Editor

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine