Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்



(அஸீம் கிலாப்தீன்) – நாடளாவிய ரீதியில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கொழும்பு  தேசிய  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

குறித்த போராட்டத்தின் போது கொழும்பு  தேசிய   வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்று வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்க கூறுகையில்,

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையினை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை எனவும் இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும். கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

கோதுமை மா விலை குறைப்பு..!

wpengine

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

wpengine

இராணுவத்தினர் எரிபொருள் விநியோகம் செய்வதில் தடை…………

wpengine