உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது….



தமது போராட்டத்தை எட்டாவது நாளாக இன்றும்(07) மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று(06) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இன்று(07) பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது – நீதிமன்றம்..

wpengine

புதிய இடமாற்றங்களூடாக பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்களின் சம்பளம் இடைநிறுத்தம்…

wpengine

பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

wpengine