உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) பணி பகிஷ்கரிப்பில்…



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளித்தவாறு கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் தமக்கு சம்பள உயர்வை வழங்கவில்லை.

எனவே, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று நாடு முழுவதும் அடையாள பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று தீர்மானம் கிடைக்காவிடின் நாளை வேலை நிறுத்தத்தில்..

wpengine

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

ஆசிரியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine