உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு…



(FASTNEWS|COLOMBO) அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடைமுறையைக் கருத்தில்கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது.

பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு அமைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களை மீளத்திறப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களை ஆரம்பித்ததன் பின்னரான மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது ஆள் அடையாள அட்டைகளை எப்போதும் காட்சிப்படுத்துமாறும் பல்கலைக்கழகத்திற்குள் பிரசேிப்பதற்கு முன்னர் தமது பைகள் பொதிகளை பரிசோதிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

காலி மாவட்டத்தில் 52 கொரோனா நோயாளிகள்

wpengine

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

wpengine

BUREVI வலுவிழந்தது

wpengine