உள்நாட்டு செய்திகள்

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கொழும்பிற்கு அழைப்பு…



பல்கலைகழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இன்று(06) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக சகல பணியாளர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்கலைகழக நிறைவேற்று தர அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் பல பிரதேசங்களில் மழை…

wpengine

ஆசியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பயன்படுத்த தடை..

wpengine

சஜித்தின் பிரசார கூட்டத்தில் ரணில்

wpengine