உலக செய்திகள்

பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவரை பயங்கரவாதி என அமெரிக்கா அறிவிப்பு..



பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவை ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனவும், இவர் ஆயுத சண்டைக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கூறி அவரை பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்துள்ளது.

முன்பே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவித்து இருந்த நிலையில், இதனை பயனற்ற ஓர் அறிவிப்பு என ஹமாஸ் இயக்கம் வர்ணித்துள்ளது.

2008 ஆம் ஆண்டிலிருந்து ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் நாட்டுடன் மூன்று முறை சண்டையிட்டுள்ளது. வெவ்வேறு தாக்குதல்களில் 17 அமெரிக்கர்களை ஹமாஸ் இயக்கம் கொன்றுள்ளது என்று அமெரிக்கா ஹமாஸை குற்றஞ்சாட்டி உள்ளது.

இஸ்மாயில் ஹனியா மட்டுமன்றி, காஸா மற்றும் மேற்கு கரையில் இயங்கும் ஹராகத் அல் சபிரீன், எகிப்த்தில் இயங்கும் லிவா அல் தவ்ரா மற்றும் ஹசம் ஆகிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

#rishma

Related posts

வங்காளதேசத்தில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை – அலைமோதும் மக்கள் வெள்ளம்

wpengine

பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

wpengine

“இர்மா” புயலின் தாக்கத்தினால் 6 பேர் பலி..

wpengine