Top Story 2உள்நாட்டு செய்திகள்

பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – நாமல் கோரிக்கை..!

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் இலங்கை வாக்­க­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்பு தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது குறித்து சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் ஆலோ­ச­னையைப் பெறு­வது தொடர்­பான இந்த வாக்­கெ­டுப்பில் இலங்கை பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, இலங்கை கடந்த காலங்­களில் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளித்­ததைப் போன்று எதிர்­கா­லத்­திலும் தனது ஆதரவைத் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜே.சி. அலவத்துவல மற்றும் லக்கி ஜெயவர்தன ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி…

wpengine

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை

wpengine

ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்ப்பு வெள்ளியன்று

wpengine