உலக செய்திகள்

பரோன் டிரம்பிற்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்பிற்கும் (Barron Trump) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவனான பரோனுக்கு எப்போது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை மெலனியா டிரம்ப் வெளியிடவில்லை.

பரோனுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும், ஆனால் தற்போது அவன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் மெலனியா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்பிற்கு வைரஸ் தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து பரோன் டிரம்ப் எப்போது குணமடைந்தார் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை.

Related posts

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 22ஆவது இடம்

wpengine

கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான ஆஸிப்.பத்திரிகைகள்

wpengine

நியூசிலாந்து மீண்டும் முடக்கம்

wpengine