வாழ்க்கை

பருக்களை போக்க முகத்திற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்தினால் ஏற்படும் மாற்றம்…



நீங்கள் தினமும் பல் விளக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டைக் கொண்டும் முகத்தில் தோன்றும் பருக்களை சரி செய்ய முடியும்.

ஏன் டூத் பேஸ்ட் ?
பெரும்பாலும் அனைத்து வகையான டூத் பேஸ்ட்டில் பேக்கிங் சோடா சேர்க்கப்பட்டிருக்கும். இவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதனால் பருக்கள் வருவது தவிர்க்கப்படும். அதேபோல இதிலிருக்கும் மென்தால் பருக்களால் ஏற்ப்பட்ட தழும்பினை போக்க உதவுகிறது. டூத் பேஸ்டில் இருக்கக்கூடிய மூலப்பொருட்களான triclosan, benzoyl peroxide, salicylic acid போன்றவை பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்ட் மற்றும் தேன் :
டூத் பேஸ்ட்டின் அடிப்படையாக குளிர்ச்சி வாய்ந்தது. ஒரு கிண்ணத்தில் ஒரு பின்ச் டூத் பேஸ்ட்டுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அவற்றை முகத்தில் பருக்கள் அல்லது தழும்புகள் உள்ள இடத்தில் பூசுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.

பூண்டு :
முதலில் பூண்டினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். டூத் பேஸ்ட்டுடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் பூண்டு சாறினை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்கலாம். பூண்டு சாறு கலந்திருப்பதால் கலவை பூசிய இடங்கள் எரிச்சலைத் தரும். அதோடு பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதால் சிலருக்கு அதிக எரிச்சல் இருக்கலாம். பத்து நிமிடங்களில் இதனை குளிர்ந்த நீரினால் கழுவிடுஙகள்

ரோஸ் வாட்டர் :
உடலில் அதிக சூடு இருந்தாலும் பரு தோன்றிடும். டூத் பேஸ்ட்டுடன் ரோஸ்வாட்டர் கலந்து அந்த கலவையை முகத்திற்கு பூசி வர பருக்கள் மறைவதுடன் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வெந்தயம் :
முதல் நாள் இரவே சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெந்தயம் ஊறிய தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு டூத் பேஸ்ட்டை கலந்து முகத்திற்கு பூசினால் பருக்களினால் உண்டாகும் தழும்பினை மறைய வைக்க முடியும்.

Related posts

உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

wpengine

கண்ணை சுற்றியுள்ள கருவளையத்திற்கு…

wpengine

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

wpengine