உள்நாட்டு செய்திகள்

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன் கருதி இராணுவ பஸ்கள் சேவையில்…


ரயில்வே ஊழியர்களின் தீடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றையதினம்(09) பரீட்சைக்குத் தோற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி, இராணுவ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடையும் வரை இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் தீடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக, கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று(08) மாலை முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

எனினும், ரயில்களின் பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் கடமையில்
ஈடுபட்டத்தப்பட்டனர்.

Related posts

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு

wpengine

நாட்டை முடக்கத் தீர்மானம் இல்லை

wpengine