விளையாட்டு

பயிற்ச்சியைக் கைவிட்டு அனுஷ்காவுடன் சுற்றுலா சென்ற கோஹ்லி



அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.

இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11ம் திகதி பெர்த்தில் நடக்கிறது. இந்நிலையில் டோனி தலைமையிலான இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக தற்போது டெஸ்ட் அணித்தலைவராக உள்ள கோஹ்லி, ஒருநாள் போட்டிக்கும் விரைவில் தலைவராகும் நிலையில் அவர் ஓட்ட மழை பொழிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டு கோஹ்லி துடுப்பாட்டத்தில் பெரிதாக சொபிக்கவில்லை. அவரது ஒட்டுமொத்த துடுப்பாட்ட சராசரி 50ஆக உள்ள நிலையில், இந்த ஆண்டு 36.64 ஆக சரிந்தது.

இந்நிலையில் விராட் கோஹ்லி இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சியில் கவனம் செலுத்தாமல், புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார்.

 

Related posts

தெற்காசிய போட்டிகளில் சாதித்த இலங்கைக் குழாம் தாயகம் திரும்பியது

wpengine

ஜமைக்காவின் புயல் உசேன் போல்ட் விடைபெறுகிறார்..

wpengine

T20 சாதனை மற்றும் நிரோஷன் திக்வெல்ல குறித்து குசல் ஜனித் கருத்து…

wpengine