உள்நாட்டு செய்திகள்

பேரூந்து தீ விபத்தில் – 19 பேர் காயம்..



தியதலாவ, கஹகொல்ல பயணிகள் பேருந்து ஒன்றில் இன்று(21) காலை ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில், தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் பெண்ணொருவருடன் 7 பொதுமக்களும் 12 படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்லவெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை அடுத்தே தீப்பரவியதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————UPDATE 

பயணிகள் பேருந்து ஒன்றில் தீ விபத்து…

இன்று(21) காலை தியதலாவ, கஹகொல்ல பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine

கடன் செலுத்தாமையால் இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்!

News Editor

வடமாகாண முதலமைச்சர் மற்றும் மலேஷிய பிரதமர் சந்திப்பு…

wpengine