உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான புதிய சட்டமூலம் இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு..


பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் இவ்வாரம்  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த இச்சட்டமூலம் தற்போது அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக நம்பகரமான அரச தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

சட்டம் மற்றும் ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்னாயக்க, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டு  மேற்படி சட்டமூலம் தொடர்பான நகல் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும், கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக சர்வதேச தரப்பில் அமைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் ஐ.நா.விடமும் சர்வதேசத்திடமும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

STF பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்த அறிக்கை நாளை பொலிஸ்மா அதிபரிடம் ..

wpengine

2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்…

wpengine

” இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நீங்கள் ஆற்றிய சேவைகளை போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

News Editor