உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலை – இருவர் வலையில்..



பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களது புகைப்படங்கள் இரண்டு தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கேகாலையில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து வர்த்தகரின் தந்தைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கப்பம் கோரியவர்களே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார்..

wpengine

வாக்களிக்க விசேட போக்குவரத்து வசதி

wpengine

சைக்கிள் ஓடும்போது தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்!

wpengine