உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பம்பலபிட்டி பகுதியில் மற்றுமோர் தமிழ் மாணவி கடத்தல்..



பம்பலபிட்டி பகுதியில் மற்றுமோர் தமிழ் மாணவி(19) கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவியினை விடுவிக்க 75லட்சம் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடத்தல் விவகாரம் குறித்த முழுமையான தகவல்..

கடத்தப்பட்டு காணாமற்போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

உடுவில் வீதி மானிப்பாயை சேர்ந்த    பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக  மேலும்   தெரியவருவதாவது,

பம்பலப்பிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி(19) என்ற மாணவி கடந்த 23 ஆம் திகதி காணாமற் போயுள்ளார். 

காணாமற்போன மாணவி தொடர்பில் தாயார் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை  தனது சொந்த ஊரான மானிப்பாய்க்கு வருகை தந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர்  வந்து, காணாமற் போன மகளை விடுதலை செய்து தருவதாக கூறியதுடன், 75 லட்சம் ரூபா பணத்தினை தயார்படுத்துமாறும் கூறியுள்ளார்.

அத்துடன், அவ்வாறு பணத்தினை தயார்படுத்தாவிடின், தற்போதைய சூழ்நிலை தெரியும் தானே என்றும், அதற்கு ஏற்றவாறு பணத்தினை தயார் செய்யுமாறும், தாங்கள் கூறுமிடத்திற்கு வந்து பணத்தினைத் தருமாறும் கூறிவிட்டு சட்டடென்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நபர் வெளியேறியதும், குறித்த தாய் உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் நடந்த சம்பவத்தினையும் கூறியுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரிக்கை

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திலக் ராஜபக்ஷ எம்.பி..!

wpengine

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine