உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பனாமா ஆவணக் கசிவினது முழுமையான விவரங்கள் இன்று வெளியாகிறது.?



உலகளாவிய ரீதியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவண கசிவு தொடர்பான தகவல்கள் இன்றையதினம்(09) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த ஆவணத்திலுள்ள மோசடியாளர்கள் தொடர்பான விபரங்களை இணையத்தளம் ஊடாக வெளியிட பிரத்தியேக இணைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பனாமா இரகசிய ஆவணங்களுக்கமைய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இதில் வெளியிடப்படவுள்ளது.

இன்று வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த  ஆவண கசிவின் மூலம் இலங்கையை சேர்ந்த 46 பேரின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதில் குறிப்பாக அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் அடங்குகின்றனர்.

 

Related posts

7 மாகாணங்களுக்கு தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை..

wpengine

இலங்கையிலும் ஐ.எஸ் அச்சுறுத்தல்

wpengine

அரசியல் பழிவாங்கல் : அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்

wpengine