கேளிக்கை

பத்மாவத் திரைப்பட இயக்குனர் தலைக்கு உடனடியாக 51 லட்சம் ரூபா சன்மானம்..



இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படத்திற்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிற நிலையில், இந்த படம் வரலாற்றை தவறாக சித்தரிக்கிறது எனவும், அதனால் படத்தை திரையிடக்கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. இதைக் கண்டித்து திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் கலவரங்கள் வெடித்தன.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அகில இந்திய ராஜ்புத்திரர்கள் அமைப்பின் துணைத்தலைவர் திவாகர் சிங், ´பத்மாவத் திரைப்படத்தின் இயக்குனர் சஞ்சய் பன்சாலியின் தலையை கொண்டு வரும் நபருக்கு உடனடியாக 51 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் இந்த பிரச்சினை குறித்து எத்தகைய கருத்தும் தெரிவிக்காத அரசியல் வாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்து கொடுப்போம்.

குருகான் பள்ளி பேருந்து தாக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் இல்லை. அது சினிமா துறையினர் போராட்டத்தை முறியடிக்க செய்த வேலை. ராஜ்புத்திரர்கள் ஒரு போதும் நிராயுதபாணி, பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க மாட்டார்கள்´ என கூறினார். திவாகர் சிங்கின் இந்த அறிவிப்பு அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#g-reeshma

Related posts

இளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS]

wpengine

இராஜிற்கு போட்டியாக சூடான இரவுக்கு சூடுவைத்த ஆண்மகன்களது படைப்பு இன்னும் சூடானது.. (Video)

wpengine

நீச்சல் தடாகத்தில் குளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

wpengine