ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகின் கவனத்தை ஈர்த்த சானக்க, வனிந்து,ராஜபக்ஸ; அள்ளி குவியும் வாய்ப்புகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்துக்கு-10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் இளம் வீரர்கள் உலகில் கவனத்தை தம்பக்கம்  ஈர்த்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான பத்துக்கு-10 லீக் தொடரானது அபுதாபியில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இம்முறை இலங்கை அணியின் 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க மற்றும் பானுக்க ராஜபக்ஸ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் லசித் மாலிங்க, தசுன் சானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய மூவர் மரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், நிரோஷன் டிக்வெல்ல டீம் அபுதாபி அணிக்கும், திசர பெரேரா பங்ளா டைகர்ஸ் அணிக்கும், பானுக்க ராஜபக்ஸ டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கும் மற்றும் குசல் பெரேரா டெல்லி புல்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; புலிகள் உறுப்பினரின் மகனா? (முழுவிபரம் இணைப்பு)

wpengine

எதிர்காலத்தில் மஹிந்தவுக்கு போட்டியாக தினேஷ் களத்தில் – ஜோதிடர் ஊகம்…

wpengine

ஆஸி வீரர் ஆரோன் பிஞ்ச் இனால் மைதானத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்…! (VIDEO)

wpengine