ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பதுளை – ஹாலிஎல பாடசாலை ஆசிரியையினால் 15 வயதான மாணவன் பாலியல் வன்முறைக்கு…



பதுளை – ஹாலிஎல பாடசாலையில் தனது மாணவர்களில் ஒருவரை ஆசிரியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு ஒன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளியான குறித்த ஆசிரியை ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது என நவம்பர் மாதம் பொலிஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 வயதான ஆசிரியை பாடசாலையில் ஒரு விழா நடந்த காலத்தில் 15 வயதான தமது மகனை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தினார் என பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிவான் நேற்று(24) தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என் நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

வாகனத்தில் இருந்து இறங்கிய அகில, மோட்டார் சைக்கிளில் மழையில் நனைந்த வண்ணம் பாராளுமன்றிற்கு…

wpengine

நீர்த் தாங்கியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!

wpengine

அவர்கள் எமது அரசர்கள்… அவர்களுக்கு தலை வணங்கி மரியாதை செய்யவும்.. கைகுலுக்கக் கூடாது.. மீறினால் கைது… (PHOTOS)

wpengine