Top Story 1உள்நாட்டு செய்திகள்

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் விசேட அவதானத்துடன் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் இதர பொருட்களும் அதிக தேவையுடன் விற்பனை செய்யப்படுவதால், இது தொடர்பாகவும் சோதனை நடத்தப்படும் என்றார்.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பினால் 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு திகதி அறிவிப்பு…

wpengine

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து..

wpengine

கொழும்பில் 18 மணித்தியாலம் நீர் வெட்டு அமுலுக்கு…

wpengine