Top Story 2உள்நாட்டு செய்திகள்

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

wpengine

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

wpengine

சோபித தேரரின் மரணம் குறித்து வைத்தியர்களை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

wpengine