கேளிக்கை

பட வாய்ப்புக்காக ஆண்களும் பெண்களும் செய்யும் வேலை – பிரியங்கா சோப்ரா…



பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில்
“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.

அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன். என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்ப்புக்காக நான் அனுசரித்துப் போகவில்லை.

நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்” என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Related posts

பிரியங்கா – ஜோன்ஸ் விவாகரத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

wpengine

தொலைபேசியில் தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

wpengine

நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகுமாறு தனுஷிற்கு அழைப்பாணை..

wpengine