உள்நாட்டு செய்திகள்

படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…



கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் நேற்று(20) மாலை களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடுவெல்லேகம மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான்(23) என்ற மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.

பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா : சந்தேகத்தின் பேரில் 10 பேர்

wpengine

நாளை முதல் ஊரடங்குச்சட்டம் அமுல்

wpengine

ஆஸி அணியினை கதிகலங்க வைத்த அசேல குணரத்ன’வின் பின்னணி இதுதானுங்க…

wpengine