உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பாய் இந்தியன்ஸ் 03 விக்கெட்டுகளால் வெற்றி…



(FASTNEWS|COLOMBO) 2019 இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதையடுத்து 198 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

மும்பை அணி சார்பில் கீறன் பொலாட் 31 பந்துகளில் 10 ஆறு ஓட்டங்கள் மூன்று நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 83 ஓட்டங்களை அதி கூடுதலாக பெற்றார்.

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் இதுவரை 6 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த வெற்றியை அடுத்து, 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related posts

மோடி, ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு

wpengine

கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

wpengine

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

wpengine