உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 36 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் 10 திகதி முதல் நவம்பர் மாதம் 10 திகதி வரையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றத்தில் உள்ள அவரது கடவுச்சீட்டை 2 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் முதலாவது செயற்கை கடற்கரை திறப்பு..!

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine

லைலா மற்றும் சுருக்கு வலைகளுக்கு இலங்கையில் தடை

wpengine