உள்நாட்டு செய்திகள்

பசில் , மஹிந்த இரகசிய சந்திப்பு



இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ, தனது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுடன் வாரியப்பொலவில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை வாரியப்பொலவில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் டி.பி.ஹேரத் வீட்டில் இந்த இரகசியக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மகிந்த ராஜபக்ஷவிடம் புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,தாம்,நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாக பதிலளித்தார்.

Related posts

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நிவாரணப் பணிகள் பாதிப்பு – கம்மன்பில குற்றச்சாட்டு..

wpengine

ரஞ்சனின் குரல் பதிவு: சட்டத்தினை வளைத்துள்ளது – நாமல்

wpengine

உயர் தரத்திற்கான தனியார் வகுப்புகள் 31ம் திகதிக்கு பின்னர் தடை…

wpengine