ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பசிலினை பாதுகாக்கப்போய் சிக்கலில் கோட்டா..



கடந்த மஹிந்தவின் அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினாலேயே  மேற்படி  விசாரணை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோத்தபாயவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேர் பசிலின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பசிலின் மனைவியின் பாதுகாப்பிற்காக பெண் கடற்படை உத்தியோகத்தர்கள் மூன்று பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பசிலின் வீட்டை சுத்தம் செய்யும் பணிகளும் பாதுகாப்புத் தரப்பினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அமைச்சர் ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டமை பாரிய பிரச்சினையாகும். அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களை முழுமையாக மீறி படையினரையும் பொலிஸாரையும் எந்தவிதமான அடிப்படையும் இன்றி கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்தவே கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

காரை தொட்டிலாக மாற்றிய பொலிஸார்: ஜேர்மனியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்

wpengine

இந்திய பெண்ணை மணமுடிக்கின்றார் பாகிஸ்தானின் சகலதுறை வீரர் (photos)

wpengine

MV XPress Pearl பாரிய அழிவுக்கு இது தான் காரணம்

wpengine