விளையாட்டு

பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் சிக்கல்.



பங்களாதேஷ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாளை(09) புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர் சிம்மன்ஸ் வருவதற்கு முன்னர் முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஜியோப் மார்ஷ் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் பங்களாதேஷ் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நிலையில் எதிர்வரும் ஞாயிறன்று(10) இறுதி முடிவு எடுக்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கட் வாரியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

-reeshmaa..

Related posts

ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை – நீதிமன்றம்

wpengine

T20 WORLD CUP : இலங்கையை வென்றது தென் ஆபிரிக்கா

wpengine

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine