உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விபரம்…



பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான (ODI) இலங்கை அணி விபரம் இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படும் நிலையில் ,உபாதை காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் விக்கெட் காப்பாளரும் , துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , குசலுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் , அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.

அணி விபரம் இதோ…

உபுல் தரங்க (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (உபத்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய த சில்வா, குசல் மென்டிஸ், அசேல குணரத்ன, தனுஷ்க குணதிலக, சுரங்க லக்மால், லஹிரு குமார, விக்கும் சஞ்சய், திசர பெரேரா, சசித் பத்திரன, லக்ஷான் சந்தகென்

(rizmira)

Related posts

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மஹிந்தவுக்கு மேல்நீதிமன்றம் அழைப்பாணை

wpengine

பல்கலைக்கழக பரீட்சைகள் தொடர்பிலான தீர்மானம்

wpengine