உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை



(FASTNEWS|COLOMBO) – பங்களாதேஷிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றது.

அஞ்சலோ மெத்யூஸ் 87 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களைப் பெற்றார்.

295 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 36 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி பங்களாதேஷ் உடனான தொடரை 3 க்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு.

wpengine

பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

wpengine

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

wpengine