உள்நாட்டு செய்திகள்

பகிடிவதையை கட்டுப்படுத்த கைத்தொலைபேசி “app” அறிமுகம்…



பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி “app” வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, புதிய தொலைபேசி app ஐ அறிமுகம் செய்யும் நிகழ்வில் வைத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பகிடிவதை தொடர்பான 280 சம்பவங்கள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பகிடிவதையினால் அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ள விரும்புவதில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹிருணிகாவிற்கு பிடியாணை

Azeem Kilabdeen

பிரதமருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

wpengine

மஹிந்தவின் மகன், நாமல் இல்லையா..? சர்ச்சையை கிளப்பியுள்ள ஹிருணிக்கா..!

wpengine