உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10 மீனவர்கள் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான கொண்டுகா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அல்லு டாம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது திடீரென அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சில மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2018-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில்.

wpengine

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine

ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…

wpengine